Have written a small Tamil Poem on Independence. Sorry, if I translate it, it will kill it ! So, you have to do with the Tamil one.
ஆகஸ்டு பதினைந்தும் சுதந்திரமும்To be honest, our kids stand in the queue on the Independence Day celebration not as a respect to the Flag, but due to the fear of their Teachers. After standing in the hot sun for an hour or so, compensated unequally by a small toffee, they break free only when everyone disappears from the school ground. If they could play like this, that is real freedom !
காற்றில் ஆடும் தேசியகொடிகள்
காதைக் கிழிக்கும் மேடைப் பேச்சுகள்
அரசியல் சுதந்திரத்தின் ஆரவாரங்கள்
ஆகஸ்டு 15ன் மாயத் தோற்றங்கள்
வருடந்தோறும் விடாமல் நடக்கும்
பக்தி சடங்குகள் தேச சம்பிரதாயங்கள்
தேவை இல்லை இந்த சுதந்திரம்
எனக்கு வேண்டும் உண்மை சுதந்திரம்
வெயில் அடிக்கும் பகல் நேரத்தில்
என் வீட்டு வாசல் வேப்ப நிழலில்
காலை நீட்டி தூங்க முடிந்தால்
ஆஹா கிடைத்தது சுதந்திரம் கிடைத்தது சுதந்திரம்
நெருஞ்சி முட்களை ஒதுக்கி விட்டு
என் குருஞ்சிப் பூக்களை விருந்துக்கு அழைத்து
மலர்களுடன் மயங்கியே கிடந்தால்
அன்று மனதுக்கு கிடைத்தது மகிழ்ச்சி சுதந்திரம்
கொட்டும் மழையில் சிரிக்கும் நதியில்
பொட்டல் காட்டில் எரிக்கும் வெயிலில்
ஆயிரக்கணக்கில் ஆட்கள் நெரிக்கும்
அரசியல் கூட்டம் சந்தை திருவிழாவில்
முகமும் முகவரியும் இல்லாத உருவமாய்
தனியாய் காற்றாய் நிழலாய் அருவமாய்
இருந்தும் இல்லாமல் இருக்க முடிந்தால்
இனிப்பாய் இனிக்கும் இன்பச் சுதந்திரம்
ரகசிய சந்தோஷங்களை
ரணங்களை ஆசைகளை
பயத்தையும் கூடவே என்
பொறாமையையும் சொல்ல ஒரு
தோழி குறைந்த பட்சம் ஒரு தோழனாவது
கூட இருந்தால் பாக்கியம்
அது சுதந்திரம்
என்ன தான் இருந்தாலும்
பிடித்தவளிடம் பல் இளிக்கவும்
பிடிக்காதவனிடம் முகஞ்சுளிக்கவும்
முடிந்தால் போதும்
அதுவே சுதந்திரம்
No comments:
Post a Comment