Sorry, this can be only a Tamil Post. Difficult to translate !!
அந்தக்காலத்தில் பெண்ணைக் காதலித்து கல்யாணம் செய்வதற்கு பெண்ணின் பெற்றோர்களின் சம்மதமும், விருப்பமும் மிக முக்கியமாக இருந்தது. பெற்றோர்களைக் கவர எடுத்துக்கொள்ளும் முயற்சிகள் பெண்ணைக்கவரும் முயற்சிகளுக்கு சமமாகவே இருக்கும் என்றே சொல்லலாம். "பலே பாண்டியா" படத்தில் தேவிகாவைக் காதலிக்கும் சிவாஜி, அவரது தந்தையான M.R.ராதாவின் மனதைக் கவருவதற்காக ஒரு கர்நாடக சங்கீதப் பாடலைப் பாடும் ஒரு அற்புதமான நகைச்சுவைக் காட்சி உண்டு. அதில் எப்படியெல்லாம் தன் மாமாவைப் புகழுகிறார் பாருங்கள்...
"நீயே உனக்கு என்றும் நிகரானவன்
அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி நின்றவன் (என்ன அருமையான உவமை!)
வாய் வேதம், கை நீதி, விழி அன்பு, மொழி கருணை
வடிவாகி முடிவற்ற முதலான இறைவா !"
இப்படிச் சொல்லி விட்டு, முத்தாய்ப்பாக
"துதிபாடும் கூட்டம் உன்னை நெருங்காதய்யா
வெறும் தூபத்தில் உன் இதயம் மயங்காதய்யா"
என்றும் பெரிய ஒரு ஐஸ் வேறு வைக்கிறார்.
கேட்ட ராதா மயங்கி, உடனே 'நீ தான் மாப்பிள்ளை' என்று சொல்லும் நிலைக்கு வந்து விடுகிறார்.
ஆனால் இன்றோ? பையன் நேரடியாக பெண்ணிடம் மட்டும் தான் பேசுகிறான் - அவளுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும். மேலும் அவளது பெற்றோரைக் கவரும் முயற்சியை விடுங்கள், அவர்கள் மீது துளி மரியாதையும் இல்லை. அடிக்காத குறையாக இருந்தது இதுவரை. இப்போது அதுவும் சீக்கிரமே நடக்கும் என்று நினைக்கிறேன். மிகவும் பாப்புலரான இந்நப் புதிய பாடலைப் பாருங்கள் -
"எவன்டி உன்னைப் பெத்தான்?
என் கைல கிடைச்சா செத்தான்!"
பெண்ணின் அப்பாக்கள் ஜாக்கிரதை!!

1 comment:
thalaivaaaaa.... one small problem!!! Ponnu summa irokku ma???
this is only a dream.... ponnu appa mela kai vachon, ponnu namma kaiya aruthruvange...... !!!
Boys dont have to go to the parents only because girls dont want it. they decide themselves!!! hahhaha
Post a Comment